12/09/2025 ஸ்ரீகிருஷ்ணரின் அவதார திருநாள்.

ஈழத்து திருப்பதி எனப் போற்றப்படும் யாழ் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகிருஷ்ணர் இரவின் இருளில் வசுதேவர் மற்றும் தேவகியின் முன்பு பூரணச் சந்திரனைப் போல் அவதரித்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அபிஷேக ஆராதனைகளில் பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் பங்கு கொண்டு ஸ்ரீமத் நாராயணின் திருவருட்கடாற்சங்களை பெற்றனர். நன்றி : திரு இரவி சிவானந்தன்

01-Kudamukuku02062023
10-Kudamukuku02062023
09-Kudamukuku02062023
08-Kudamukuku02062023
07-Kudamukuku02062023
06-Kudamukuku02062023
05-Kudamukuku02062023
03-Kudamukuku02062023
04-Kudamukuku02062023
02-Kudamukuku02062023
previous arrow
next arrow

2023-Kovil-Works2
2023-Kovil-Works1
previous arrow
next arrow

புனருத்தாரண திருப்பணி வேலைகள்

ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் வண்ணையம்பதி ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தின் புனருத்தாரண திருப்பணி வேலைகள் இன்று (01-06-2023)  ஆரம்பமாகியது

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் கோயில்  வருடாந்த பெருவிழாவின் ஒளிப்பதிவுகள் 2022

26.09.2022 |கொடியேற்றம்  27.09.2022 | 2ம் நாள் திருவிழா 28.09.2022 | 3ம் நாள்  திருவிழா 
29.09.2022 | 4ம் நாள்  திருவிழா 30.09.2022  5ம் நாள்  திருவிழா  01.10.2022  | 6ம் நாள்  திருவிழா
02.10.2022  | 7ம் நாள் திருவிழா  03.10.2022  | 8ம் நாள் திருவிழா 04.10.2022  | தேர்த்திருவிழா 
 05.10.2022 | தீர்த்ததிருவிழா 09.10.2022 |  சுமங்கலி பூஜை நன்றி : ஓம் டிவி
     

மூன்றாவது புரட்டாதி சனி
மூன்றாவது புரட்டாதி சனி
மூன்றாவது புரட்டாதி சனி3rd-Sat-07
3rd-Sat-06
மூன்றாவது புரட்டாதி சனி
3rd-Sat-04
3rd-Sat-03
3rd-Sat-02
மூன்றாவது புரட்டாதி சனி
previous arrow
next arrow

02/01/2023 வைகுந்த ஏகாதசி  உற்சவம் 

வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுந்த ஏகாதசி உற்சவம்  சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டது. 

நன்றி : பெருமாள் மகாசபை இலங்கை புலனம் குழு

24/09/2022 புரட்டாதி சனி விரத பூசை வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது! 

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டிஎரித்ததோடுஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் சிறப்பாக இடம் பெற்றது

13Jan22_Egatasi
13Jan22_Egatasi1
13Jan22_Egatasi3
13Jan22_Egatasi4
13Jan22_Egatasi5
13Jan22_Egatasi6
13Jan22_Egatasi7
2023-Egathasi (2)
2023-Egathasi (3)
2023-Egathasi (4)
previous arrow
next arrow

02-10-2021 வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம் மூன்றாவது புரட்டாதி சனி வழிபாடுகளுடன் எம்பெருமான் வெள்ளிக் கருட வாகனம் ஏறிவீதியுலா வந்தார். தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளை அனுசரித்து மிகக் குறைந்த அடியார்களுடன் உள்வீதியுலாவுடன் திருவிழா நடைபெற்றது. 

25-09-2021 வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் இரண்டாவது புரட்டாதி சனி விரத அனுட்டானங்கள் நடைபெற்றன. தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைவாக  மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சுவாமி உள்வீதி உலா நடைபெற்றது. 

10-09-2021 

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமானுக்கு நாகமரத்தினால் சிறப்பாக செய்யப்பட்ட புதிய கொடிமரம் சம்பிரதாய முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 06-10-2021ல் ஆரம்பமாக உள்ள நிலையில், பெருந்தொற்றுப் பேரிடர் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவான திருவிழா அறிவித்தலை விரைவில் வெளியிடுவதாக ஆலய நிர்வாகம் அறியத்தருகின்றனர்.

27-06-2021  கோவிட -19 இடர் உதவி கொடிய தொற்றுநோய் அகில உலகையும் உலுக்கிவரும் இவ்வேளையில் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன், புவித் தொற்றுப் பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆலய ஊழியர்கள் , ஆலய சுற்றாடலில் வசிக்கும் 120 குடும்பங்களிற்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் ஆலய மண்டபத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது.  இந் நற்காரியத்திற்கு பொருளுதவியும் , ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் , திறம்பட ஒழுங்கமைத்த ஆலய நிர்வாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் அனைவருக்கும் நாராயணன் அருட்கடாட்சம் வேண்டி நிற்கின்றோம். 

14-01-2021 யாழ் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய தைப்பொஙகல் உற்ஸவம் சிறப்பு பூஜை 
15/01/2021 பட்டிப் பொங்கல் உற்ஸவம்  கோபூஜை வேணுகோபாலர் அபிஷேகம் , அன்னதானம்  கோமாதா உற்ஸவம். தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளை அனுசரித்து மிகக் குறைந்த அடியார்களுடன் உள்வீதியுலாவுடன் திருவிழா நடைபெற்றது. 

25-12-2020 யாழ் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலய வைகுண்ட ஏகாதசி சிறப்பு பூஜை
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது

08-11-2020 மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் 

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அருளாசி வேண்டி இன்று விஷேட பிரார்த்தனை வழிபாடுகளும் , மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் ஆலய மண்டபத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.  

05-08-2020 அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்திய துணைத் தூதுவர், தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள் , பக்தர்கள் விசேட பூஜை வழிபாட்டடில் கலந்து சிறப்பித்தனர்

Covis19-6
Covid19-3
Covid19-4
Covid19-2
cCovid19-5
Covid19-1
previous arrow
next arrow

02-04-2020 உலர் உணவுப் பொதிகளை வழங்கியது.
ஆலயத்தின் சுற்றாடலில் வாழும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேவஸ்தானம் உலர் உணவுப் பொதிகளை ஆலயத்தின் திருமண மண்டபத்தில் வைத்து உரிய சுகாதார பாதுகாப்புடன் வழங்கியது.

நிர்வாக சபை – 2017 வரை*

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாசபை பொதுக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய தேர்தல் முறையை ஆட்சேபித்து 4 அங்கத்தவர்கள் 2017ல் தொடர்ந்த வழக்கு இன்று வரை முடிவின்றி தொடர்வதால் இது வரையில் புதிய நிர்வாக உத்தியோகத்தர் தெரிவு நடைபெறவில்லை.

20 பக்க யாப்பு , 6 பக்க விசேட பொதுக்கூட்ட அறிக்கை என்பவற்றினை வாசித்து விளங்கி அதனடிப்படையில் ஒரு தீர்ப்பு வழங்கவே நீதித்துறை எடுத்துக் கொள்ளும் அதீத அவகாசம் நீதித்துறை மீதான நம்பிக்கை நகைப்புக்கிடமாகியது.

தாமத நீதி அநீதிக்கு சமம்

Scroll to top
01/10/2025 இரதோற்சவம்
This is default text for notification bar