“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதையும் ” ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்பதையும் சைவசமயம் உணர்த்தி நிற்பதற்குச் சான்றாக கிராமங்கள், நகரங்கள் தோறும் அதிகளவான ஆலயங்களைக் கொண்ட நகரமாக யாழ் நகரம் விளங்குகின்றது. காத்தற் கடவுளாம் விஷ்ணுவின் அடியவர்களுக்கு அருள் கிடைக்க வேண்டும் எனும் நோக்கத்துடன் யாழ் வண்ணையம் பகுதியில் உருவாக்கப்பட்டதே வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயம்.

யாழ் குடாநாட்டின் வண்ணையம்பதியின் மையப்பகுதியில் தென்கிழக்காக மணிக்கூட்டு வீதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். வண்ணையம்பதியில் நெசவுத் தொழிலை மேற்கொண்டு வந்த வைசியக் குலத் தோன்றல்களாகிய பத்ம சாலிச் செட்டிகள் தமது வைணவ வழிபாட்டை பேணுவதற்காக 14ஆம் நூற்றாண்டு காலத்தில் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தைத் தோற்றுவித்தனர். அதனைத் தொடர்ந்து 17ஆம் நூற்றாண்டில் வசதிபடைத்தவர்களின் நிதியுதவியுடன் ஆலயத்தின் நித்திய பூசைகள் யாவும் சிறப்பாக நடைபெற்றன. 18,19 நூற்றாண்டு காலங்களில் ஆலயத்துக்கென வரவு செலவுத்திட்டம் திட்டமிடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 18 ஆம் நூற்றாண்டில் “நவக்கிரக மண்டலம் ஸ்தாபிக்கப்பட்டது”. ஏனைய ஆலயங்களை விட இவ் ஆலயதிதன் நவக்கிரன மண்டல அமைப்பு மிகவும் வேறுபட்டதாகும். அதனைத் தொடர்ந்து மஹோற்ஸவங்களும் இடம்பெற ஆரம்பித்தன. மஹோற்ஸவங்களுக்கான செலவுகளுக்கு புரட்டாதி மாதத்தில் கிடைக்கும் வருவாயினை பயன்படுத்தினர்.

சிறிய அளவிலாக இருந்த ஆலயத்தை விஸ்தரிக்கும் நோக்கில் வைசிய குலத்தினர் தமது காணிகனை ஆலயத்திற்கு தர்மசாசனம் செய்தனர். காணிகளை மட்டும் இன்றி தமது வருவாயின் ஒரு பகுதியை ஆலயத்தின் வளர்ச்சிக்கு வழங்கியதாக ஆலயத்தின் குறிப்பேடுகள் கூறுகின்றன.

1810 ஆம் ஆண்டு தொடக்கம் இச் சாகியத்தாரின் முயற்சியினால் மூன்று காலப் பூசைகள் தினமும் இடம்பெறத் தொடங்கியது. 1810 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் மடப்பள்ளி களஞ்சிய அறை என்பன அமைக்கப்பட்டன.அத்துடன் 1820 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான கும்பாபிஷேகமும் நடாத்தப்பட்டதாக ஆலயக் குறிப்பேடுகள் கூறுகின்றன. அதனைத் தொடர்ந்து 1840 ஆம் ஆண்டளவில் ஸ்ரீ மஹாலக்சுமி சந்நிதி நவக்கிரக பீடம், உட்பிரகாரச் சுற்று மதில் முதலானவை கட்டப்பட்டன. 1878 ஆம் ஆண்டுக்கு முன்னரே மகாமண்டபம், வசந்த மண்டபம், யாகசாலை, திருமஞ்சனக் கிணறு முதலியன பொழியப்பட்ட காட்டுக் கற்களினால் கட்டிச் செப்பனிடப்பட்டதுடன் பூந்தோட்டம், “சந்திர புஷ்கரணி” எனும் தீர்த்தக் கேணியும் நிர்மாணிக்கப்பட்டன. 1878 ஆம் ஆண்டு “பிரம்மோற்ஸவம்” ஆரம்பிக்கப்பட்டது.


Scroll to top
01/10/2025 இரதோற்சவம்
This is default text for notification bar