யாழ் நகரில் ஏறத்தாழ 14ம் நூற்றாண்டில் அரசோச்சிய தமிழ் மன்னனாகிய குணபூசன ஆரியன் செகராச சேகரனின் காலத்து சிறிய உருவில் வைணவ வழிபாட்டுத் தலமாக உருப் பெற்ற வண்ணை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பெற்று சகல பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் அமையப்பெற்ற நிலையில் பிரசித்தமான நவக்கிரக பீடத்தை தன்னகத்தேயுடைய ஒரு திவ்விய ஷேத்திரமாக அன்று தொடங்கி இன்று வரை விளங்கி வருகின்றது.
மகா கும்பாபிசேகம் 2024
வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில்
சோபகிருது ஆண்டு பங்குனி மாதம்
11 ம் நாள் ( 24-03- 2024 ) ஞாயிறு காலை 10:09 முதல் 11:21 வரையுள்ள
சுபவேளையில் அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள்
மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் அழகிய இராஜகோபுரங்களுக்கும்
மகா கும்பாபிசேகம் நடைபெற திருவருள் கூடியுள்ளது.
விஷ்ணு ஆலய தீபம்
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் விஷ்ணு ஆலய தீபம் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டது.
நன்றி : Capital Tharisanam
26.09.2022 |கொடியேற்றம்
27.09.2022 | 2ம் நாள் திருவிழா
28.09.2022 | 3ம் நாள் திருவிழா
29.09.2022 | 4ம் நாள் திருவிழா
30.09.2022 5ம் நாள் திருவிழா
01.10.2022 | 6ம் நாள் திருவிழா
02.10.2022 | 7ம் நாள் திருவிழா
03.10.2022 | 8ம் நாள் திருவிழா
04.10.2022 | தேர்த்திருவிழா
05.10.2022 | தீர்த்ததிருவிழா
09.10.2022 | சுமங்கலி பூஜை
யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இன்றைய தினம் புரட்டாதி சனிவிரத பூசை ஆரம்பநிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்திற்குவருகை தந்து தமது பாவங்கள் தீர்வதற்கு பெருமாளுக்கு எள் எண்ணெய் சுட்டிஎரித்ததோடுஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் சிறப்பாக இடம் பெற்றது
படங்கள் ஈழநாடு
13/01/2022 மார்கழி 29 இருபத்து ஒன்பதாம் நாள் வைகுந்த ஏகாதசி உற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் வைகுந்த ஏகாதசி உற்சவம்
சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டது.
நன்றி : Ramanan Selvanathan
02-10-2021
வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்
மூன்றாவது புரட்டாதி சனி வழிபாடுகளுடன் எம்பெருமான் வெள்ளிக் கருட வாகனம் ஏறிவீதியுலா வந்தார். தற்போது அமுலில் உள்ள சுகாதார வழிமுறைகளை அனுசரித்து மிகக் குறைந்த அடியார்களுடன் உள்வீதியுலாவுடன்
திருவிழா நடைபெற்றது.
நன்றி : பெருமாள் மகாசபை இலங்கை புலனம் குழு
10-09-2021
27-06-2021
ஸ்ரீராமஜெயம்
கோவிட -19 இடர் உதவி
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. திருக்குறள்-102
கொடிய தொற்றுநோய் அகில உலகையும் உலுக்கிவரும் இவ்வேளையில் வண்ணை ஸ்ரீவேங்கடேச வரதராஜப் பெருமாள் கோவிலடியை பூர்வீகமாகக் கொண்ட புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன், புவித் தொற்றுப்
பேரிடரால் பாதிக்கப்பட்ட ஆலய ஊழியர்கள் , ஆலய சுற்றாடலில் வசிக்கும் 120 குடும்பங்களிற்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய உலர் உணவுப் பொதிகள் ஆலய மண்டபத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டது. இந்
நற்காரியத்திற்கு பொருளுதவியும் , ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் , திறம்பட ஒழுங்கமைத்த ஆலய நிர்வாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவிப்பதுடன் அனைவருக்கும் நாராயணன் அருட்கடாட்சம் வேண்டி
நிற்கின்றோம்.
தகவல் : செல்லையா சச்சிதானந்தன்
வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கௌரவ தலைவர் : திரு ஸ்ரீ.பாலமுரளி
கௌரவ உபதலைவர் : திரு தி.தயாபரன்
கௌரவ செயலாளர் : திரு இ.இராகவன்
கௌரவ உப செயலாளர் : திரு இரா ரகுபதி
கௌரவ பொருளாளர் : திரு V .N.C இரமணீசன்
கௌரவ நிர்வாக உறுப்பினர்கள் :
திரு பெ.கோவிந்தசாமி
திரு இ.பட்டாபிராம்
கௌரவ உள்ளக கணக்காய்வாளர்கள் :
திரு ஸ்ரீ.சிறிதரன்
திரு V.S.கிருஷ்ணமூர்த்தி
* 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாசபை பொதுக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய தேர்தல் முறையை ஆட்சேபித்து 4 அங்கத்தவர்கள் 2017ல் தொடர்ந்த வழக்கு இன்று வரை முடிவின்றி தொடர்வதால் இதுவரையில் புதிய நிர்வாக உத்தியோகத்தர் தெரிவு நடைபெறவில்லை. வாதி, பிரதிவாதி தரப்பில் மூவர் இயற்கை எய்திவிட்டனர் !!
25-12-2020ல் நள்ளிரவில் ஆலய திறப்பினை கைப்பற்றிய மகாசபையின் ஒரு தரப்பினர் தற்போது ஆலயத்தை நிர்வகித்து வருகின்றனர்.
தற்போது ஆலய நிர்வாக சபை தொடர்பான விபரங்கள் கிடைக்கவில்லை.
தாமத நீதி அநீதிக்கு சமம்
20 பக்க யாப்பு , 6 பக்க விசேட பொதுக்கூட்ட அறிக்கை என்பவற்றினை வாசித்து விளங்கி அதனடிப்படையில் ஒரு தீர்ப்பு வழங்கவே நீதித்துறை எடுத்துக் கொள்ளும் அதீத அவகாசம் நீதித்துறை மீதான நம்பிக்கை நகைப்புக்கிடமாகியது.
தாமத நீதி அநீதிக்கு சமம்