ஸ்ரீரெங்கன் பத்து

வண்ணை ஸ்ரீரெங்கன் பத்து
பல்லவி
வண்ணை வாழ் வேங்கடேசா உன்
வண்ணம் கண்டேன் வரதராஜா

அநுபல்லவி
பெரும் புகழ் தந்திடும் வேங்கடேசனே
அரும்பொருள் ஈந்திடும் அரங்கேசனே
வரும் வினைஅகற்றிடும் வரதராசனே
துருவி ஞானம் நல்கிடும் நாராயணனே

சரணம்
வாராயோ வாசுதேவா
பாராயோ பத்மநாபா
தாராயோ தாமோதரனே
தீராயோ தீவினைகள் திரிவிக்கிரமனே

ஸ்ரீரங்கநாதா
வாயிலிலே வான் அளாவிய கோபுரந்தனை கண்டேன்
கோயிலிலே அரவின் மேல் பள்ளி கொள்ளும் பத்மநாபனை பணிந்தேன்
நாபியிலே நான் முகனைத் தரிசிததேன்
தாமரையிலே வீற்றிருக்கும் திருமகளையும் 
மகளையும் ஒரு சேரக் கண்டேன்.

மகாலஷ்மி
உயர்வுற கமலாசனத்தில் வீற்றிருக்கும் தாயே
துயர்வற துன்பம துடைத்திடும் கற்பக வல்லியே
ஆயர்வற அகம் மகிழ்வித்த அருஞ்செல்வியே

ஸ்தல விருடசம்
வான் அளாவிய பலா விருடசம் காண்
தான் அளாவிய பலாக்கனிகள் காண்
தேன் அளாவிய வண்டினங்காண்
போன் அளாவிய திருவுடைமார்பினைக் காண்

சந்தானகோபாலர்
ஆலிலை மேல்  கண்வளரும் சந்தான கோபாலா
கோலினைத்தாங்கி ஆவினைமேய்த்த சீலா
மாலின் வடிவாய் அவதாரம் ஏற்ற மாயா 
வாலினைப் பற்றி அரவின் மேல் ஆடிய தூயா

கருடாழ்வார்
நாராணற்குப் பெரிய திருவடியானவனே
காரணனாய் விண் மிசைக் கருடனாய் – ஊர்ந்தவனே
பூரணனாய் அரங்கற்கு தாசனாய் – அமைந்தவனே
வாரணம் சூழ் வடவேங்கடவனைத் – துதிசெய்பவனே

கோபாலகிருஷ்ணன்
தேவகி மைந்தானாய உதித்த கோபாலா
தேவரைக்காக்க ஜனித்த யசோதரை புதல்வா
கோவலர் சோதரனாய் ஆவினம் மேய்த்த கண்ணா
குவலயம் காக்க வந்தவண்ணா

ஸ்ரீ ராமர்
தருமம் தழைக்க வந்த தசரதமைந்தா
மருமகனாய் ஐனகற்கு வாய்த்த இராகவா
உருவில் மாயமானாய் வந்தமாரீசனை – அழித்தவனே
மாருதிபால் நேயம் பூண்ட ஜானகி ராமா

ஸ்ரீ ஆண்டாள்
பூமாலையும் பாமாலையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே
பூமாதேவியாக வந்துதித்தகோதைப் – பிராட்டியே
திருமால் தன்னை வரிக்க மேகம் விடு தூது செய்த நங்கையே
அரங்கமாலுடன் சோதியாய் இணைந்த பொற்கொடியே

ஆழ்வார்கள்
போற்றிபோற்றி பொய்கையர்
பூதத்தார் பேயாழ்வார் போற்றி போற்றி போற்றி 

திருமழிசையர் குலசேகரர்
தொண்டரடிப்பொடியார் போற்றி போற்றி போற்றி 
நம்மாழ்வார் மதுரகவியார் திருப்பாணர் போற்றி போற்றி போற்றி 
ஸ்ரீ ஆண்டாள் பெரியாழ்வார் திருமங்கையர் போற்றி

ஆஞ்சநேயர்
மாருதனாய் இராமதூதன் எனப் போற்றப்படுபவரே
காரணனாய் சீதைபாற் சென்று கணையாளி பெற்றவரே
பூரணனாய் இராவணன் அரசை தீயிட்டு அழித்தவரே
நாரணனாய் அமைந்தவர்க்கு சிறிய திருவடி ஆனவரே

வண்ணக்கோபுரம் 
அரங்கன் வாயிலில் வண்ணக்கோபுரங் கண்டேன்
அரங்கநாதனின் பாம்பனை அறிதுயில் – கண்டேன்
அரங்கனின் நாபியில் நான்முகனின் உருக்கண்டேன்
அரங்கேசனுடன் ஸ்ரீதேவி வீற்றிருக்க கண்டேன
சுபம்

ஆக்கம் உயர்திரு V.N.C நாராயணசுவாமி அவர்கள்

X