முகப்பு


Date: November 25, 2020
இன்று சார்வரி வருடம் கார்த்திகை 10 புதன்
நாளை ஏகாதசி உற்ஸவம்

யாழ் நகரில் ஏறத்தாழ 14ம் நூற்றாண்டில் அரசோச்சிய தமிழ் மன்னனாகிய குணபூசன ஆரியன் செகராச சேகரனின் காலத்து சிறிய உருவில் வைணவ வழிபாட்டுத் தலமாக உருப் பெற்ற வண்ணை ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் ஆலயம் ஒல்லாந்தர் காலத்தில் புனர்நிர்மாணம் செய்யப் பெற்றது. பின்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி பெற்று சகல பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் அமையப்பெற்ற நிலையில் பிரசித்தமான நவக்கிரக பீடத்தை தன்னகத்தேயுடைய ஒரு திவ்விய ஷேத்திரமாக அன்று தொடங்கி இன்று வரை விளங்கி வருகின்றது.


08-11-2020

யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்தில் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் அருளாசி வேண்டி இன்று விஷேட பிரார்த்தனை வழிபாடுகளும் , மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமமும் ஆலய மண்டபத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.

05/08/2020

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி சிறப்பு பூஜை வழிபாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பாரதப் பிரதமர் உயர்திரு நரேந்திர மோடி தலைமையில் 05-08-2020 ல் நடைபெற்றது.
இதையொட்டி, யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை , சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்திய துணைத் தூதுவர், தூதரக அதிகாரிகள், ஆலய நிர்வாகிகள் , பக்தர்கள் விசேட பூஜை வழிபாட்டடில் கலந்து சிறப்பித்தனர்.

அயோத்தியில் ராமர் கோவில் – சிறப்பு பூஜை வழிபாடு

02/04/2020

வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம்

உலகில் ஏற்பட்டுள்ள தீய நுண்மியின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சமூகவிலகல் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது.

ஆலயத்தின் சுற்றாடலில் வாழும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு தேவஸ்தானம் உலர் உணவுப் பொதிகளை ஆலயத்தின் திருமண மண்டபத்தில் வைத்து உரிய சுகாதார பாதுகாப்புடன் வழங்கியது.

X