மஹோற்ஸவ நிகழ்வுகள் 2019

29-09-2019 கொடியேற்றம்   சூரியப்பருதிச் சேவை அன்னச் சேவை
முதல் நாள் விழா கொடியேற்ற விழாவாகும். கொடியேற்ற விழாவன்று சுவாமி தேவிமாருடன் சூரிய விருத்தச் சேவையில் எழுந்தருளுகின்றார். கொடியேற்றத்தன்று இரவு சுவாமி மாத்திரம் அன்ன வாகனத்தில் வெளிவீதி உலா வருவார். பிரம்ம தேவனது படைத்தற் தொழிலை ஞாபகப் படுத்தும் விதமாக அன்ன வாகனம் அமைகிறது.

30-09-2019 இரண்டாம் திருவிழா கருடச் சேவை சேஷசயனச் சேவை
இரவு சுவாமி ஐந்து தலை நாகம் மீது சயனம் செய்யும் வகையில் அழகிய கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக் காட்சி பகவான் பாற்கடலில் பள்ளி கொள்ளும் நிலையை உணர்த்துகின்றது.

01-10-2019 மூன்றாம் திருவிழா கருடச் சேவை கருடச் சேவை இரவு சுவாமி கருடன் மீது வீதிவலம் வருகின்றார். இக் காட்சி பகவானது காத்தற் தொழிலை ஞாபகப்படுத்துகின்றது.

02-10-2019 நான்காம் திருவிழா கருடச் சேவை அனுமன் சேவை இரவு சுவாமி அனுமன் மீது எழுந்தருளிக் காட்சி தருகின்றார். சுவாமியின் கையில் வில்லு அம்புடன் சாத்துப்படி நடைபெறுகின்றது. இக்காட்சி ஸ்ரீராமனது அவதாரத்தை உணர்த்துகின்றது.

03-10-2019 ஐந்தாம் திருவிழா கருடச் சேவை பூந்தண்டிகைச் சேவை
இரவு சுவாமி பூந்தண்டிகையில் வீதி வலம் வருகின்றார். சுவாமியை மிக அலங்காரமாக செல்வந்தக் கோலத்தில் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இது பகவானை செல்வந்தனாக சித்தரிக்கின்றது.

04-10-2019 ஆறாம் திருவிழா கருடச் சேவை கஜேந்திரச் சேவை இரவு சுவாமி யானை மீது வீதி வலம் வருகின்றார். சுவாமி கையில் துரட்டி கொடுத்து கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகின்றது. இக்காட்சி பகவான் முதலை வாயிலிருந்து யானையைக் காத்த செயலை உணர்த்துகின்றது.

05-10-2019 ஏழாம் திருவிழா மூன்றாம் புரட்டாதிச் சனிவாரம் கருடச் சேவை வெண்ணைய் தாழிச் சேவை இரவு சுவாமி சப்பறத்தில் வெண்ணெய்த் தாளியுடன் எழுந்தருளுவார். இது ஸ்ரீகிருஷ்ணர் வெண்ணெய் உண்ட காட்சியை கஸ்தம் பாதச் சாத்துப்படி மூலம் மக்களுக்கு உணர்த்தும் காட்சியாகும்.

06-10-2019 எட்டாம் திருவிழா கருடச் சேவை அஸ்வாருடச் சேவை பகல் சுவாமி அம்பாள்மாருடன் சின்னக் கருட வாகனத்தில் உள்வீதி வலம் வருகின்றார். இரவு சுவாமி குதிரை மீது காட்சி தருகின்றார். கையில் சவுக்கு கொடுத்து மறுகையில் கடிவாளத்துடன் கஸ்தம் பாத சாத்துப்படி செய்யப் படுகிறது. இக்காட்சி பகவானைக் குபேரனாகவும் கல்கி அவதாரம் பெற்றவனாகவும் சித்தரிக்கின்றது.

07-10-2019 ஒன்பதாம் திருவிழா இரதோற்ஷவம் கருடச் சேவை பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார்.

08-10-2019 பத்தாம் திருவிழா தீர்தோற்ஸவம்
காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார்.

கொடியிறக்கம்

09-10-2019 திருக்கல்யாண உற்ஸவம் காசி யாத்திரை ஏகாதசி உற்ஸவம் மாலையில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். மணவாளக் கோலத்தில் பூந்தண்டிகையில் வெளிவீதிஉலா வருவார்.

10-10-2019 திருவூஞ்சல் பூந்தொட்டி உற்ஸவம் மாலையில் சுவாமி வசந்த மண்டபத்தில் பூஜையாகிய பின் திரு ஊஞ்சல் பாக்கள் ஓதுவார் இசைக்க திருவூஞ்சலில் ஆடுவார்.

11-10-2019 யோக நாராயண உற்ஸவம் சுவாமியை யோகநாராயணர் சேவையில் கஸ்தம் பாதசாத்துப்படி செய்து இவருடன் கூட ஆதிஸ்ரீவேங்கடேஷ்ரவரையும் அலங்கரித்து இலந்தை விருட்சச் சேவையில் வெளிவீதி உலா வருவார்.

12-10-2019 நான்காம் புரட்டாதிச் சனிவாரம் கருடச் சேவை கருடச் சேவை

13-10-2019 மஹாலட்சுமி அபிஷேகம்   உற்ஸவம் சுமங்கலி தீப பூஜை

14-10-2019 பிராயச்சித்த அபிஷேகம்   வாகன பூஜை ஆஞ்சநேயர் அபிஷேகம் உற்ஸவம் காலை மூல மூர்த்திகளுக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று வாகன பூஜையும் நடைபெறும். அன்று மாலை ஆஞ்சனேய மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று ஸ்ரீஆஞ்சனேயர் வீதி வலம் வருவார். இத்துடன் மகோற்சவ விழா நிறைவு பெறுகிறது. Gallery not found.

X