01/10/2025 ஒன்பதாம் நாள் பகல் சுவாமி தேவிமாருடன் மிக அலங்காரமாக சிம்மாசனத்தில் காட்சி தருகின்றார். ஜடாமுடி தரித்து சுவாமி தேவியருடன் அழகிய ரதத்தில் உலா வருவார். இரதோற்சவத்தன்று சுவாமி தேரினின்று இறங்கி தேவஸ்தானத்திற்குள் வரும் போது பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்கப் படுகிறார். பாத தீர்த்த வைபவம் நடைபெற்றதும் கோவில் ஓதுவார், ஊழியர்களாகிய மங்கள வாத்தியக்காரர், சங்க நாதம் ஒலிப்பவர், பூமாலை புனைபவர், திருத்தொங்கல் புனைபவர், தேருக்கு முண்டியிட்ட ஆசாரியார், சலவைத் தொழிலாளர், களஞ்சிய வேலை செய்வோர் ஆகியோருக்கு வேட்டி சால்வை வழங்கப்படுகின்றது. சுவாமி வசந்த மண்டபம் அடைந்ததும் சுவாமிக்கு சர்க்கரை, புளி, தயிர் சாதவகைகளுடன் பழவகைகளும் காளாஞ்சிகளும் பானகம் ஆகிய சர்க்கரையுடன் தேன் கலந்த நீர், மோர் ஆகியவை நிவேதனம் செய்யப்படுகின்றன. இதன் பின் மகா ஆசீர்வாத வைபவம் நடைபெறுகின்றது.

முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)

Scroll to top
01/10/2025 இரதோற்சவம்
This is default text for notification bar