02/10/2025 பத்தாம் நாள் காலையில் தீர்த்தோற்சவ அங்கம் ஆகிய பொற்சுண்ணம் இடித்தல் வைபவம் பொற்சுண்ணப் பாக்கள் இசைக்கப் பட்டு நடைபெறும். இதன் பின் பேரி தாடன உற்சவம் நடைபெற்று சுவாமி கருட வாகனத்தில் அம்பாள்மாருடன் தீர்த்தோற்சவத்திற்குச் செல்வார். தீர்த்த வைபவம் நிறைவு பெற்றதும் சுவாமி உள்வீதியில் யாக மண்டபத்தில் நின்று பூரணாகுதியை ஏற்றுக்கொண்டு கோபுர வாயில் சென்று பாத தீர்த்தம் பெற்று அமர்கிறார். கொடிக்கம்பத்தின் முன்னால் ஆதிஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு ஆசனம் கொடுக்கப் படுகின்றது. இவருக்கு திருவோணத் தீபப் பூஜை நடாத்தப் பட்டு திருவோணத் தீபம் ஏற்றப்படுகிறது. இதன் பின் மூல மூர்த்திக்கு யாக கும்பாபிஷேகம் நடைபெறுகின்றது. இதன் பின் கோபுர வாயிலில் இருந்து சுவாமி வசந்த மண்டபத்தை அடைந்ததும் யாகப் பொட்டும் முளைப்பாலிகையையும் தீர்த்தமும் அடியவர்கட்கு வழங்கப்படும். இத்துடன் தீர்த்தோற்சவ விழா நிறைவு பெற்று இரவு கொடியிறக்க விழா நடை பெற்று சுவாமி அம்பாள்மாருடன் சந்திரப் பிறைச் சேவையில் வெளிவீதி உலா வருகின்றார்.





முந்தைய நாள் திருவிழா அடுத்த பக்கத்தில் (நன்றி சமூகவலை தளங்களில் பதிவிட்ட உறவுகளுக்கு)